விஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சமையல் தொடர்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி சென்ற வாரம் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2-ம் இடத்தைப் பிடித்தார் உமா ரியாஸ்க்கு 1 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 3-ம் இடத்தை ரம்யா பாண்டியனும், 4-ம் இடத்தை ரேகாவும் பிடித்தார்கள்.

விஜய் டிவியில் நீயா நானா, பிக் பாஸ், சூப்பர் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சிகளின் வரிசையில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இணைந்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்ச்சியை தொகுத்து வழங்கிய அறந்தாங்கி நிஷாவிற்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என பெயர் வைத்துள்ளனர். அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பச்சிளங்குழந்தையுடன் வந்த நிஷாவின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. 

விஜய் டிவியின் செல்ல பிள்ளையான சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி படப்பிடிப்பு நடைபெற்று வரும் செட்டிற்கு நேரடியாக சென்று இருக்கிறார். அது மட்டும் இல்லாது அங்கிருந்த பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை மணிமேகலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால், விரைவில் இதிலும் சீஸன் 2 தொடங்குவார்கள் எனத் தெரிகிறது.